Thursday, December 7, 2006

பா.க.ச அனானி கிளை - அனுமதி

வீ த பீப்பிள் அவர்களின் பரிந்துரையின் பேரில் பா.க.ச வின் அனானி கிளை உறுப்பினர்களுக்கும் இவ்வலைப்பூவில் அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துடன் ஆவியுலக வாசிகளான ஆவி அண்ணாச்சி, ஆவி அம்மணி, மோகினிகள் கழகம், குட்டிச்சாத்தான்ச் கிளப், கொள்ளிவாய்ப்பிசாசு போன்றோரும் ஆதரவு அளிப்பதாக தனி மடல் அனுப்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பா.க.ச தொண்டர் படை என்ற புதிய பெயருடன் இந்த அமைப்பு, பா.க.ச வின் தங்கை நிறுவனமாக (Sister Concern) இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, December 6, 2006

பா. க. ச - அறிமுகம்

FAQ : Frequently Asked Questions.
பலராலும் கேட்கப்படும் கேள்விகள்.
1. பா.க.ச என்றால் என்ன?
பாலபாரதி என்னும் குழந்தை(!?) உள்ளம் கொண்ட வலைப்பதிவரை கலாய்ப்பவர்களை ஒருங்கிணைந்து செயல்பட வைக்கும் ஒரு அமைப்பு. இதற்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கிளைகள் உண்டு. சென்னையில்தான் இதன் தலைமை அலுவலகம் உள்ளது.
2. பா.க.ச வில் உறுப்பினர் ஆவது எப்படி?
பால பாரதி அவர்களை கலாய்க்கும்படியான பின்னூட்டமோ, பதிவோ (குறைந்த பட்சம் ஒன்று) இட்டுவிட்டால் போதும்.
3. பா.க.ச வில் யாரெல்லாம் சேரலாம்?
வலைப்பதிவர்கள், வாசிப்பவர்கள் அனைவரும் சேரலாம். அனானியாகவோ, அதர் ஆப்ஷனில் பின்னூட்டமிடுபவர்களும் இந்த சர்வதேச அமைப்பில் சேர்ந்து பணியாற்றலாம். இதில் நாடு, மொழி என்ற பேதமெல்லாம் இல்லை.
4. ஆன்லைனில் இல்லாதெ நேரங்களில் எப்படி கலாய்ப்பது?
தொலைபேசியில் அழைத்து நேரடியாகவும் கலாய்க்கலாம். அல்லது மற்ற உறுப்பினர்களை தொலைபேசியில் அழைத்து தங்கல் கலாய்த்தல் கருத்துக்களை பதிவு செய்யலாம். மின்னஞ்சம் மூலம் அனுப்பலாம்.
5.இடையில் சில நாட்கள் கலாய்க்காமல் விட்டுவிட்டால் உறுப்பினர் பதவி நீக்கப்படுமா?
கவலை கொள்ளத் தேவை இல்லை. நீங்களே மறந்திருந்தாலும் பாலபாரதி அவர்களே நினைவூட்டி கலாய்க்கச் சொல்வார்.
6. கலாய்த்தலுக்கென்று அதிகபட்ச அளவு ஏதேனும் உண்டா?
வானமே எல்லை!